நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு:
இந்த நினைவு வாரம் வருடம் தோறும் மே மாதத்தில் நடைபெறும். மேலும் மே மாதம் 18ம் திகதியை தமிழீழ தேசிய துக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும்,பல தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட விபரங்கள் சமீபத்தில் வெளி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஐ.நா.சபையின் அறிக்கையின்படி சிறிலங்கா அரசின் திட்டமிட்ட வகையில் உணவு செல்வதற்கு தடை விதித்த காரணமாக ,பல தமிழ் மக்கள் பட்டினியால் இறந்ததாகவும் மேலும் பல தமிழர்கள் சிறிலங்கா அரசின் மருந்துத்தடை காரணமாகவும்,இரத்தப்பெருக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டும் ,கற்பழிக்கப்பட்டவர்களை நினைவு கூருவதற்காகவும்,மரியாதை செலுத்துவதற்காகவுமே இந்த நினைவு வாரம் அமைகின்றது.
புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உலகெங்கும் தமது தொகுதிகளில் இந்த நினைவு வார நிகழ்வுகளை மேற்கொள்வார்கள்.
பல்வேறு சமய ஆலயங்களில் வழிபாடுகளும்,ஆராதனைகளும்,நினைவுக் கூட்டங்களும்,மலர் தூவி அஞ்சலியும், மெழுகுவர்த்தி ஒன்று கூடலும் நடைபெறும்.
மேலும் மே மாதம் 18 ந்திகதி நியூயோர்க்கிலும் ,nஐனிவாவிலும் உள்ள ஐக்கிய.நாடுகள் சபையின் முன்றலில்,
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினை, சிறிலங்கா அரசினை சர்வதேச குற்றநீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தும்படி கோரியும் பேரணி நடைபெறும்.
சிறிலங்காவின் தமிழ்இனப் படுகொலைக்காகவும்,போர்க்குற்றங்களுக்காகவும் ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும்படியும் வேண்டுகோள் விடுக்கப்படும்.
இந்த மேற்படி வேண்டுகோள்களை கோரி உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கையெழுத்து வேட்டை தொடர்ந்து நடைபெறுமென்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது
அரசியல் வெளி இல்லாத காரணத்திற்காகவும், மிகவும் மோசமான பயங்கர நிலைமை உள்ள காரணத்திற்காகவும் தமிழீழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் சுதந்திரமாகவும்,வெளிப்படையாகவும் படுகொலை செய்யப்பட்ட ,கற்பழிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்காக நினைவு நாள் நிகழ்ச்சிகளையே நடத்த முடியாத அடிப்படை உரிமைகள் இன்றி,பயம் கொண்ட நிலையில் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் புலம் பெயர் தமிழ் மக்கள் ஐனநாயக சுதந்திரத்தினை,மனித உரிமைகளுக்கு மரியாதை கொடுக்கின்ற நாடுகளில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இம்மக்கள் படுகொலை செய்யப்பட்டும்,கற்பழிக்கப்பட்டும்,மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களுக்காக பல நிகழ்வுகளையும்,நினைவுகூரும் நிகழ்ச்சிகளையும் நடாத்துகின்றார்கள்.
சர்வதேச குற்றவாளியான சிறிலங்கா அரசு தமது கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்ஈழ மக்களை மிரட்டி தமிழர் படுகொலை நினைவு வாரத்தை அனுஷ்டிக்காமல் தடுத்தாலும் புலம் பெயர் தமிழர்களின் நினைவுகூரும் நினைவுகளை கைகட்டி நின்று பார்த்துக் கொண்டு பொருமுவதைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை.


Kommenter denne artikkelen